Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2019 17:09:18 Hours

மாலி நாட்டிற்கு ஐக்கிய நாட்டு சமாதான பணிகளின் நிமித்தம் சென்ற இலங்கை இராணுவத்தினருக்கு தாக்குதல்

இன்று காலை (25) ஆம் திகதி மாலி நாட்டில் ஐக்கிய நாட்டு சமாதான பணிகளின் நிமித்தம் சென்ற இராணுவ அணியினருக்கு இடம் பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்தவரும் பொலன்னறுவையை பிறப்பிடமாக கொண்ட கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவவிக்ர அவர்களும், 1 ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்தவரும் தலகொலவெவ பொல்பிடிகமையை பிறப்பிடமாக கொண்ட கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார அவர்கள் காலமானார்கள்.

மேலும் இந்த தாக்குதலில் பன்விலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 1 ஆவது இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.ஜி.எஸ் குமாரசிங்க அவர்களும், கன்னதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 1 ஆவது இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் கே.சி புஸ்பகுமார அவர்களும், மாகோ கேகுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 12 ஆவது இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் சி.எச்.எம்.எஸ் சந்திரசேகர போன்ற இராணுவத்தினர் காயமுற்று அப்பிரதேசத்தில் உள்ள ஜியா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இராணுவத்தினர் மாலி பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் .

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாலியில் உள்ள ஐக்கிய நாட்டு கண்காணிப்பு தலைமையகத்தின் மூலம் விசாரனைகள் மேற் கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.Running Sneakers Store | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!