Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th January 2019 15:43:31 Hours

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பூநகிரி மாணவர்களுக்கு உதவிகள்

பூநகரியிலுள்ள கிளிநொச்சி ஞானமடம் வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களது அனுசரனையில் கற்றல் உபகரணங்கள் இம்மாதம் (22) ஆம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த பணிகள் பூநகிரி பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் பாடசாலை மாணவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்க்கு கீழ் இயங்கும் 66, 661 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

நிகழ்வில் 661 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரியந்த ஜயவர்தன, 24 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , இப்பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்திருந்தனர். affiliate tracking url | Nike