Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th January 2019 14:25:54 Hours

கிளிநொச்சியில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இரு வீடுகள் நிர்மானிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு கையளிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65, 651 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 11 ஆவது கஜபா படையணியின் நிர்மான பணிகளுடன் ‘தலகல ஶ்ரீ சித்தார்த்த மன்றத்தின்’ அனுசரனையுடன் கிளிநொச்சி பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வரும் குடும்ப நபருக்கு புதிய வீடொன்று இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிர்மானித்து இம் மாதம் (22) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சி இரனைமாதா நகரில் வசித்து வந்த திரு கயாகம் ஜகதாஸ அவர்களுக்கு இராணுவத்தினால் நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டு இந்த வீடுகள் உரிமையாளருக்கு கையளிக்கப்பட்டன.

அத்துடன் வீட்டு உரிமையாளருக்கு வீட்டு பாவனையின் நிமித்தம் தொலைக்காட்சி, கதிரைகள், தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பூநகிரி பிரதி பிரதேச செயலாளர் செல்வி ஆர் கிரிஜா, 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும, 651 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி சாமத் வரகாஹொட, அப்பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர் திரு சுந்தரபாலன் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் பரந்தன் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணியான திருமதி சுப்பிரமணியம் ரஞ்சனி அவர்களுக்கு ‘தலகல ஶ்ரீ சித்தார்த்த மன்றத்தின் தலைவர் ஶ்ரீ சுமனரத்ன தேரர் அவர்களின் நிதி அனுசரனையில் 1 , 18 (தொ) ஆவது கஜபா படையணியின் நிர்மாக பணிகளுடன் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டு இந்த உரிமையாளர்களுக்கு 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் மங்கள விஜயசுந்தர அவர்களினால் இம்மாதம் (20) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

இந்த வீட்டுத் திட்டம் முன்னாள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களினால் முன்வைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டமாகும்.

இந்த நிகழ்வில் கஜபா படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.Running sneakers | Air Jordan