Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th January 2019 10:41:58 Hours

வன்னி பிரதேசத்தில் இராணுவத்தினால் காணிகள் விடுவிப்பு நிகழ்வு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இருந்த இராணுவத்தினர் குடியமர்ந்திருந்த 40.74 ஏக்கர் நிலப்பரப்புகளும், பொது மக்களது 13.64 ஏக்கர் நிலப்பரப்புக்கள் உள்ளடங்கிய 53.38 ஏக்கர் காணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியை பிரதிநிதித்துவ படுத்தி 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களினால் வடக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் சுரேன் ராகவன் அவர்களுக்கு உத்தியோகபூர்வமாக (22) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வடக்கு , கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் திரு ஐ.எம் ஹனிபா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.கே உதயராசா, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் திரு.கே பரமானந்த, செட்டிகுளம் பிரதேச செயலாளர் திரு.கே சிவகரன், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் தர பதவியிலிருக்கும் கேர்ணல் அனில் பீரிஸ் அவர்கள் இணைந்திருந்தனர்.buy footwear | Nike News