Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2019 20:55:09 Hours

66 வது படையணியின் புதிய இராணுவ தளபதியாக பிரிகேடியர் விஜய சுந்தர நியமனம்.

புதிதாக நியமிக்கப்பட்ட 66 வது படைத் தலைமையகத்தின் இராணுவ தளபதியாக பிரிகேடியர் எம்.டி. விஜய சுந்தர அவர்கள் 18 ஆம் திகதி வெள்ளிக் கிழமை 7 வது இராணுவ தளபதியாக கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் வைத்து தனது கடமையை பொறுப்பேற்றார்.

இதன் போது புதிய இராணுவத் தளபதிக்கு தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்கப்பட்ட பின்னர் உத்தியக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் இந் நிகழ்வின் போது முகாம் பிரதேசத்தில் அவர் மரக் கன்றுகளை நாட்டியதோடு தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வின் போது 66 வது படைப் பிரிவின் அனைத்து கட்டளை தளபதிகள்இபிரதேச உத்தியோகத்தர்கள் சிரேஷ்டஅதிகாரிகள்இஅதிகாரிகள் மற்றும் ஆணை பெறாத அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

புதிதாக 12 வது படைப்பிரிவிற்கு நியமிக்கப்பட்ட பிரிகேடியர் டீபதி ஜயதிலகவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. bridge media | Nike - Shoes & Sportswear Clothing