Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2019 21:00:31 Hours

விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு மேஜர் ஜெனரலாக டி.எம்.டி.சி.டி குணவர்தன அவர்கள் பதவியேற்பு

புதிதாக பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் டி.எம்.டி.சி.டி குணவர்தன அவர்களுக்கு போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணி படைத் தலைமையகத்திற்கு கடந்த (19)ஆம் திகதி வெள்ளிக்கிழமை இராணுவ சம்பிரதாய முறைப்படி அவருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து படைத் தலைமையகத்தின் நுழைவாயில் வைத்து கெளரவ அணிவகுப்பு மரியாதை படையினரால் வழங்கப்ட்டதுடன் விஜயபாகு காலாட் படையணி படைத் தலைமையக கட்டளை தளபதியவர்களால் வரவேற்கப்பட்டார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக விஜயபாகு காலாட் படையணி படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் கரியகாரவன அவர்கள் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து யுத்ததின் போது உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் நிமித்தம் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டன. vஅதன்படி மேஜர் ஜெனரல் குணவர்தன அவர்கள் தற்போது புத்தலவில் உள்ள உத்தியோகத்தர் தொழில் அபிவிருத்தி நிலையத்தில் கட்டளைத் தளபதி பணியாற்றுகிறார். affiliate tracking url | Shop: Nike