Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th January 2019 15:28:03 Hours

சாலியபுர படைத் தலைமையகத்தில் இராணுவ புதிய பதவிநிலைப் பிரதானியவர்களின் வருகை

சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படைத் தலைமையகத்திற்கு இப் படையணியைச் சேர்ந்த இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தமது கடமைப் பொறுப்பை முன்னிட்டு தமது உத்தியோக பூர்வ விஜயத்தை இப் படைத் தலைமையகத்திற்கு கடந்த வெள்ளிக் கிழமை (18) மேற்கொண்டார்.

இதன் போது இவ் அதிகாரியவர்களுக்கான இராணுவ அணிவகுப்பு மரியாதை போன்றன பிரிகேடியர் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும்ட பதவிநிலைப் பிரதானியவர்கள் கஜபா படையணியின் ஆரம்பிப்பாளரான காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் விஜயா விமலரத்தின அவர்களின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் கஜபா படையணியில் நாட்டிற்கான உயிர் தியாகம் செய்த படையினர் பலர் காணப்படுகின்றனர்.

இந் நிகழ்வின் இறுதிக் கட்டத்தில் இப் படைக்கான கீதம் இசைக்கப்பட்தோடு புதிய பதவிநிலைப் பிரதானியவர்கள் கஜபா படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்;ந்து சில நிமிடங்களின் பின்னர் படையினருடனான சிற்றுண்டி விருந்துபசார நிகழ்வும் இடம் பெற்றதோடு குழுப் புகைப்படமும் இதன் போது எடுக்கப்பட்டது.

மேலும் இவ் அதிகாரியாவர்களின் புதிய கடமைப் பொறுப்பை முன்னிட்டு இப் படைத் தலைமையகத்தில் மர நடுகை நிகழ்வும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இப் படைத் தலைமையக உணவு விடுதிக்கு புதிய பதவிநிலைப் பிரதானியவர்கள் உயர் அதிகாரிகளால் விருந்துபசார நிகழ்விற்காக அழைக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் கஜபா படைப் பிரிவின் உயர் அதிகாரிகள் கஜபா படையணித் தலைமையக தளபதி மற்றும் பிரதித் தளபதி உயர் அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Best Sneakers | Air Jordan