Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2019 12:07:10 Hours

வெலிஓயா மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்கள்

வெலிஓயா பிரதேசத்தில் வறுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் முகமாக 135 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெலி ஓயா கல்யாணபுர பாடசாலையில் இம்மாதம் (11) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு 62 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து இந்த பாடசாலை உபகரணங்களை இந்த மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்த பாடசாலை உபகரணங்கள் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நன்கொடையாளரின் அனுசரனையிலும் இராணுவத்தினரது ஒத்துழைப்புடனும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகள் 621 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஆர்.ஏ.டீ.எஸ்.எஸ் ரணவீர அவர்களது தலைமையில் இடம்பெற்றது.Nike shoes | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp