Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2019 12:06:10 Hours

62 ஆவது படைப் பிரிவினருக்கு 'ஆண், பெண் சமத்துவம்' தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக் காட்டலின் கீழ் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜே.எம்.யூ.டீ ஜயசிங்க அவர்களது தலைமையில் ‘தலைமைத்துவம் மற்றும் சக்தி’ எனும் தொனிப் பொருளின் கீழ் ஆண் பெண் சமத்துவம் தொடர்பான தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்மாதம் (10) ஆம் திகதி கல்யாணபுரம் பட்டாலியன் பயிற்சி முகாமில் இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்தில் 20 இராணுவ அதிகாரிகளும், 60 படை வீரர்களும் இணைந்திருந்தனர்.

இந்த செயலமர்வில் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் விரிவுரையாளர்களான திருமதி சுமீகா பெரேரா, திரு வேலுசாமி வீரசிங்கம் மற்றும் செல்வி ஜயந்தி குரு- உடும்பல அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.Adidas footwear | adidas garwen spezial white shoes - New In Shoes for Men