Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th January 2019 12:46:10 Hours

இராணுவத்தினரால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடிநீர் கிணறுகள் சுத்திகரிப்பு

கடந்த தினங்களில் வடக்கு மாகாணங்களில் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிப்புற்ற பொது மக்களது குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்யும் பணிளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

கடந்த ஜனவாரி (6) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இராணுவத்தினரால் 324 கிணறுகள் கிளிநொச்சியிலும், 46 கிணறுகள் முல்லைத்தீவு மாவட்டங்களில் இரைத்து சுத்தம் செய்து கொடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 57 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 4 படைத் தலைமையகங்கள் மற்றும் 8 படையணிகள் இணைந்து மாங்குளம், கிளிநொச்சி நகர பிரதேசம், முருசம்மோட்டை, கிளிநகர், பாரதிபுரம், மயிலாவனபுரம், தர்மபுரம், கண்டாவெலி, பூநகர், பனன்கன்டி, இந்திரபுரம் பிரதேசங்களில் இந்த கிணறு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுஹேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

மேலும் கண்டாவெலி மற்றும் முருசம்மோட்டை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் (6) ஆம் திகதி மாலை 502 பொது மக்கள் வசித்து வரும் கிராமத்திலிருந்து 138 கிணறுகள் இராணுவத்தினரால் சுத்திகரிக்கப்பட்டது. இந்த பணிகள் 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் ரணசிங்க அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 மற்றும் 68 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பேராறு, வசந்திபுரம்,தேராவில், ஒட்டுசுட்டான், நந்திக்கடால் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்புற்றிருந்த 46 குடிநீர் கிணறுகள் சுத்திகரிக்கும் பணிகள் இலங்கை இராணுவத்திலுள்ள 6 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி, 14 ஆவது சிங்கப் படையணி மற்றும் 7 ஆவது கெமுனு காலாட் படையணியினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகள் அனைத்தும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. Sports News | Nike Shoes