Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2019 17:04:25 Hours

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு

இலங்கை இராணுவத்தில் 22 வருட சேவைகளை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் 6 ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் ‘புரனாம’ சான்றிதழ் வழங்கி (3) ஆம் திகதி காலை கௌரவிக்கப்பட்டது.

இராணுவ தலைமையக இராணுவ தளபதியின் பணிமனையில் இராணுவ தளபதி இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களை சந்தித்து இவர்களுக்கு இந்த கௌரவத்தை வழங்கினார். இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளின் போது சிறப்பாக கடமைகளை புரிந்து நாட்டிற்காக பாரிய சேவையாற்றியவர்கள் ஆவர்.

இராணுவ தளபதி இலங்கை இராணுவத்தின் பல்வேறு தேவைகளின் நிமித்தம் இந்த அனுபவம் மிக்க ஆனைச்சீட்டு உத்தியோகத்தர்களை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இச்சமயத்தில் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தேவீந்திர பெரேரா அவர்கள் இணைந்திருந்தனர்.

இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் – 1 எச். டப்பள்யூ பெரேரா, 3 (தொ) இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் – 1 பீ. ஜி.ஏ வீரசிங்க, 18 (தொ) இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் – 1 பி குணதிலக, 5 ஆவது விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் – 1 எம்.பி.எஸ் உதய குமார, இராணுவ புலனாய்வு படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் – 1 கே. ஆர்.டி அஜித், இராணுவ புலனாய்வு படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் – 1 கே. டப்ள்யூ.ஆர் சமிந்த பண்டார போன்ற உத்தியோகத்தர்கள் இராணுவ தளபதியினால் கௌரவிக்கப்பட்டனர். best shoes | Womens Shoes Footwear & Shoes Online