Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2018 16:59:33 Hours

ஓய்வு பெறும் கடற்படைத் தளபதியவர்கள் இராணுவத் தளபதியைச் சந்திப்பு

கடற்படைச் சேவையில் இருந்து விடைபெறும் கடற்படைத் தளபதியான அட்மிரால் ஸ்ரீமேர்வன் ரணசிங்க அவர்கள் இன்று காலை (31) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ; சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இவ் அதிகாரியவர்களின் வருகையைத் தொடர்ந்த இப் படைத் தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை இடம் பெற்றதோடு இவ் அதிகாரியவர்களை இராணுவத் தலைமையக கட்டளை அதிகாரியான லெப்டின்னட் கேர்ணல் பிரதீப் கமகே அவர்கள் வரவேற்றார்.

மேலும் இவ் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட கடற்படைத் தளபதியவர்கள் இராணுவ நிர்வாக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் இணைந்து பார்வையிட்டார்.

மேலும் இவ் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் கெமுனு ஹேவா படையினரால் நிகழ்த்தப்பட்டது. மேலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ; சேனாநாயக்க அவர்கள் விடைபெற்றுச் செல்லும் கடற்படைத் தளபதியவர்களை வரவேற்றதோடு இதன் போது இராணுவ பதவிநிலைப் பிரதானி மற்றும் காலாட்படைத் தளபதி நிர்வாக பணிப்பக தளபதி யுத்த உபகரணப் பொறியியல் படையணி தளபதி இராணுவ செயலாளர் பணிப்பாளர் ஜெனரல் ஸ்டாப் அதிகாரிகள் போன்றோர் காணப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ சேனாநாயக்க அவர்கள் கடற் படைத் தளபதியவர்களுக்கு இக்கட்டான சூல்நிலைகளில் உதவிகளை வழங்கி வைத்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்தார்.

இன் நிகழ்வின் இறுதியில் விடைபெற்றுச் செல்லும் கடற்படைத் தளபதியான அட்மிரால் ஸ்ரீமேர்வன் ரணசிங்க அவர்கள் பிரதம அதிதிகள் புத்தகத்தில் தமது கருத்துக்களை குறிப்ப்pட்டார். Sport media | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat