Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2018 16:49:33 Hours

படையினர் வசமிருந்த விவசாயக் காணிகள் விடுவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ பயன்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகள மதிப்புக் குறிய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய விடுவிக்கப்படவுள்ளது.

இதன்படி, வடக்கு மாகாணத்தில் 1099 ஏக்கர் விவசாயக் நிலம் இராணுவப் பண்ணைகள் விரைவில் மக்களிடம் விடுவிக்கப்படவுள்ளது.

இந்த காணிகளில் :-

அ. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் மொத்தம் 194 ஏக்கர் நிலம் (நாச்சிக்குடா)

ஆ. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழுள்ள காணிகள் மொத்தம் 285 ஏக்கர் நிலம் (நாச்சிக்குடா)

இ. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில் மொத்தம் 120 ஏக்கர் நிலம்

ஈ. மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெல்லான்குளம் கிராம சேவகர் பிரிவின் கீழ் 500 ஏக்கர் நிலத்துடன் 600 ஏக்கர் நிலம்.

அதற்கமைய இந் நிலங்கள் 2019 ஆம் ஆண்டின் ஜனவரி இரண்டாம் வாரத்தில் வட மாகாண ஆளுநர் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு குறிப்பிடப்பட்ட நிலப்பரப்புகளுக்கு சொந்தமான ஆவணங்கள் உத்தயோகபூர்வமாக வழங்கபடவுள்ளது. buy shoes | New Releases Nike