Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2018 19:16:22 Hours

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத்தினரால் ‘மானுசாத் தெரண’ திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகள்

யூரியன் மேற்கு, பரனமோட்டை, உப்பாரு, புலின்கதேவன் கந்தல், மாங்கயன், மரிப்பு, புதுக்குளம் மற்றும் பலை, கொரக்கன்கன்று கிராமம் உட்பட் கந்தவேலி பிரதேசத்தின் யூரியன் மற்றும் முரசுமேட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 100 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவில் 573ஆவது படைப் பிரிவை சேர்ந்த 1 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியின் படையினரால் ரூ 3000/= க்கு பெருமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமென இராணுவ மன்றத்தின் பிரதிபலிப்பாக 'மானுசாத் தெரண' மனிதாபிமான திட்டத்தின் கீழ் கிராம உத்தியோகத்தர் (அரசாங்க அதிகாரிகள்) அவர்களின் பணிப்புரைக்கமைய (27) ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இப் பொதிகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பதிவு செய்யப்பட்ட மீன்கள், நூடுல்ஸ், தேயிலை பிஸ்கட்,சோப், பற்பசை, பல் தூரிகைகள் மற்றும் பல அத்தியாவசிய பொருட்கள் உள்டக்கப்பட்டிருந்தன. இந் நன்கொடைகள் உரியானிலுள்ள முருகானந்தா முதன்மை பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுஹேரா உட்பட 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய, 573 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் ஜானக ரனசிங்க, 1 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், படையினர் கலந்து கொண்டனர். Sneakers Store | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1