Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2018 14:30:22 Hours

பாதுகாப்பு படையினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி நிலப்பரப்புகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களினால் கிழக்கு ஆளுனர் மதிப்புக்குரிய திரு ரோஹித போகல்லாகம அவர்களுக்கு (27) ஆம் திகதி வியாழக் கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

அச்சமயத்தில் அரச உயரதிகாரிகளான கிழக்கு மாகாண பிரதான செயலாளர் திரு டீ.எம் சரத் அபேகுணவர்தன, மட்டக்களப்பு பிரதி மாவட்ட செயலாளர் திருமதி சிறிகாந் அம்மையார் அவர்கள் இணைந்திருந்தனர்.

இராணுவ உயரதிகாரிகளான 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கபில உதலுபொல, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் சாந்த ஹேவாவிதாரன மற்றும் 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் மிஹிந்து பெரேரா அவர்கள் இணைந்து இருந்தனர்.

மன்முனைபத்து பிரதேச செயலகத்திற்குரிய கிரன்குளம் பிரதேசத்தில் 2.25 ஏக்கர்களும், மன்முனை தெற்கு எரவில்பத்து பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசத்திலுள்ள ஒன்டச்சிமடம் பிரதேசத்தில் 0.5 நிலப் பரப்பும், மன்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்குரிய கொக்கட்டிச்சோலை போரதீவு பிரதேசத்தில் இருந்து 0.75 நிலப் பரப்பும், தொனித்தமடு கோரளபத்து தெற்கு பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசத்திலிருந்து 5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் அதிகமான நிலப் பரப்புகளை சட்டபூர்வமா உரிமையாளர்களுக்கு எதிர்வரும் தினங்களில் விடுவிக்கப்படுவதாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி தெரிவித்தார். latest Running | Men’s shoes