Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2018 09:31:49 Hours

இராணுவ 2018 ஆம் ஆண்டிற்கான ஸ்கோச் போட்டிகள்

இலங்கை இராணுவத்திலுள்ள படையணிகளுக்கு இடையிலான 2018 ஆம் ஆண்டிற்கான ஸ்கோச் இறுதிச் சுற்றுப் போட்டிகள் 24 ஆம் திகதி பனாகொட உள்ளரங்க விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்தார். இவரை இலங்கை ஸ்கோச் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் வரவேற்றார்.

இறுதிப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆடிய ஆட்டக் காரர்களின் விளையாட்டுகளை பார்வையிட்டார். இந்த இறுதிச் சுற்று ஆண்களுக்கான போட்டியில் கஜபா படையணி சம்பியனாகவும் கெமுனு காலாட் படையணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

பெண்களுக்கு இடையில் இடம்பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் இராணுவ பொலிஸ் படையணி சம்பியனாகவும் இராணுவ பொது சேவைப் படையணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

இப்போட்டியில் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களது போட்டியில் பங்கேற்றிக் கொண்டு பிரிகேடியர் ஜே.சி கமகே, மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ, கேர்ணல் திலகரத்ன அவர்கள் 1,2,3 ஆவது இடத்தைபெற்று இராணுவ தளபதியின் பரிசுகளை பெற்றுக் கொண்டனர்.

மேலும் இறுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றி வெற்றீயீட்டிய விளையாட்டு வீரர் வீராங்களைகளுக்கும் இராணுவ தளபதி சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.

இந் நிகழ்வில் இராணுவ நிறைவேற்று பிரதானி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். spy offers | Men's Sneakers