Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2018 11:37:01 Hours

இராணுவ தளபதியின் பங்களிப்புடன் இடம்பெற்ற இராணுவ அணிகளுக்கு இடையிலான அணிவகுப்பு போட்டிகள்

இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையில் வருடாந்தம் இடம்பெறும் அணிவகுப்பு போட்டிகள் பனாகொட இலேசாயுத காலாட் படையணி இராணுவ முகாம் மைதானத்தில் (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இந்த அனிவகுப்பு போட்டிகளில் 20 படையணியைச் சேர்ந்த படையணிகள் போட்டியிட்டன. அதில் ஆண்களுக்கான போட்டிகளில் முதலாவது இடத்தை இலங்கை தேசிய பாதுகாப்பணியும், இரண்டாவது இடத்தை இராணுவ பொறியியலாளர் படையணியும், மூன்றாவது இடத்தை இலங்கை சிங்கப் படையணியும் பெற்று கொண்டது.

இராணுவ மகளீர் படையணிகளுக்கு இடையிலான இடம்பெற்ற இந்த அணிவகுப்பு போட்டிகளில் இராணுவ மகளீர் படையணி முதலாவது இடத்தையும், இராணுவ பொலிஸ் மகளீர் படையணி இரண்டாவது இடத்தையும் பெற்று கொண்டது.

இராணுவ பேண்ட் அணிவகுப்பு படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற அணிவகுப்பு போட்டிகளில் இராணுவ பொது சேவைப் படையணி முதலாவது இடத்தையும், இராணுவ பொறியியலாளர் படையணி இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை இலங்கை பீரங்கிப் படையணி பெற்றுள்ளது.

இந்த போட்டிகளில் சிறந்த ட்ரம்மராக இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் ஐ.சி சிந்தகவும், மகளீர் படையணிகளின் சிறந்த தலைமை நாயகியாக லெப்டினன்ட் கே.டி.எம் கஹவலகேவும், ஆண்களுக்கான சிறந்த குழு நாயகணாக இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த கெப்டன் எச். ஆரியரத்ன அவர்கள் தேர்நதெடுக்கப்பட்டார். அத்துடன் சிறந்த அணிவகுப்பு நாயகனாக தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த பதவி நிலைச் சாஜன் எஸ். சுமதிபால தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் இராணுவ தளபதியினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.

பின்னர் இராணுவ நிறைவேற்று பிரதானியினால் இராணுவ தளபதி வரவேற்கப்பட்டு இராணுவ தளபதியினால் உரை நிகழ்த்தப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் காரியகரவஷம், இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ், மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரய லியனகே, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ ஆளணி நிருவா பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தேவிந்திர பெரேரா அவர்கள் கலந்து கொண்டனர்.affiliate tracking url | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ