Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2018 12:54:39 Hours

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பொது மக்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64, 68 அவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் ஒட்டுசுட்டான், மணக்கண்டல், கருவலகண்டல், கோடைக்காலு, கணகரத்னபுரம் மற்றும் விடயபுரம் போன்ற பிரதேசங்களில் (23) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிப்புட்டிருந்த பொது மக்கள், பிராணிகளான நாய்கள், மாடுகள், பூனைகளை கூட இந்த படையினர் காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போய் சேர்த்தனர். அத்துடன் இவர்களுக்கு உணவு வகைகளும் வழங்கி வைத்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது அறிவுறுத்தலுக்கமைய 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களது தலைமையில் நாயாறில் உள்ள கடற்படை மற்றும் இராணுவ விஷேட படையணியினது படகுகளின் மூலம் 100 பொது மக்களை மீட்கும் அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களது அறிவுறுத்தலுக்கமைய 683 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் நெடுங்கேணி முள்ளியாவளியைச் சேர்ந்த 276 குடும்பத்தைச் சேர்ந்த 682 பொது மக்களுக்கு வைத்திய வசதிகள், உணவு வகைகளை வழங்கி அவர்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து அவர்களுக்கு உதவினர்.

இந்த பணிகளில் இலங்கை இராணுவத்தின் 200 படை வீரர்கள் இணைந்திருந்தனர்.best Running shoes | Nike Air Max 270