Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2018 20:49:58 Hours

இராணுவ எகடமியில் புதிதாக நிரமாணிக்கப்பட்ட கேட்போர் கூடம் திறந்து வைப்பு

தியதலாவையில் அமைந்துள்ள இராணுவ எகடமியில் கெடெற் அதிகாரிகளுக்காக புதிதாக நிரமானிக்கப்பட்ட பெரிய கேட்போர் கூடம் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினாலும் சீனா தூதரகத்தின் மதிப்புக்குரிய தூதுவர் மதிப்புக்குரிய செங் சூவியேவன் அவர்களினாலும் (15) ஆம் திகதி காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த கேட்போர் கூடத்தில் 785 நபர்களை உள்ளடக்க கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீனா நாட்டின் நிதியுதவி அனுசரனையுடன் இந்த கேட்போர் கூடம் நிர்மானிக்கப்பட்டுள்ளன. மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் சீனா நாட்டின் பிரதிநிதிகள் இந்த இந்த கேட்போர் கூடத்தினை சுற்றி பார்வையிட்டனர். 2014 ஆம் ஆண்டு இலங்கை இராணுவ தளபதியாக விளங்கிய ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பதவி காலத்தில் இந்த சீன நாட்டு ஒப்பந்தம நிமித்தம் கைச்சாத்தப்பட்டு பின்னர் இந்த கட்டிட நிர்மான பணிகள் சீனா கட்டிட நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந்த கட்டிட பணிகளுக்கு 18 பில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. சீனா ஜூன்னன் குறூப் கம்பனியினால் இந்த கட்டிட பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த கட்டிடத்தினுள் 685 ஆசனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ நிதி உதவியுடன் இந்த கட்டிட பணிகள் மேற்கொள்ளப்ட்டுள்ளன. மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் இராணுவ உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

(படங்கள் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்து பெற்றவை) Nike air jordan Sneakers | Nike Shoes