Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2018 19:30:56 Hours

சாதனை புரிந்த கோப்ரல் கருணாரத்னவிற்கு காசோலை பரிசு

இலங்கை இராணுவத்தின் 6 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் கருணாரத்ன அவர்கள் சக்கர நாற்காலியில் புரிந்த சாதனையின் நிமித்தம் அவர்களுக்கு கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா அவர்களின் ஏற்பாட்டில் இவரை கௌரவித்து நிகழ்வொன்று (12) ஆம் திகதி சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.

இந்த போர் வீரன் தெவுந்தரதுடுவில் இருந்து பருத்திதுறை வரைக்கும் 8 நாட்கள் 580 கிமீ தூரம் சக்கர நாற்காலியில் சவாரியை மேற்கொண்டு சாதனையை டிசம்பர் மாதம் (11) ஆம் திகதி நிலை நாட்டினார்.

அதன் நிமித்தம் இவரது சாதனையை கௌரவித்து கபுருகா தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் ஒரு இலட்ச காசோலை நிதி கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் வழங்கப்பட்டது.

அத்துடன் இந்த நிகழ்வின் போது 100 பார்சல் பொதிகள் மற்றைய படையினர்களுக்கு வழங்கப்பட்டது.

கஜபா படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா அவர்களை வரவேற்றார். Buy Kicks | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth