Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2018 23:46:16 Hours

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியில் பிஎஸ்சி பட்டங்களை நிறைவு செய்த முப்படை அதிகாரிகள்

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியில் பயிற்சி இல 12 இன் கீழ் பிஎஸ்சி பட்டப் படிப்பை முடித்த முப்படை அதிகாரிகளுக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் (12) ஆம் திகதி காலை பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள் பங்கேற்று கொண்டனர். இந்த கல்லூரி வளாகத்தினுள் புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு நான்கு அடுக்கு மாடிக் கட்டிடம், 'அடோப் ஆப் விஸ்டம்' ஒரு நவீன நூலகம், இரண்டு பரீட்சை மண்டபங்கள் மற்றும் ஒரு வசதியான உணவகம் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டிடங்கள் இந்த கல்லூரியில் பயிற்சியை மேற்கொள்ளும் முப்படையினரது சுபசாதனை நிமித்தம் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

பட்டதாரி பயிற்சி நெறியில் 68 இலங்கை இராணுவ அதிகாரிகளும், 27 கடற்படை அதிகாரிகளும், 27 விமானப்படை அதிகாரிகளும், 3 பங்களாதேசத்தின் இராணுவ அதிகாரிகளும், ஒரு நேபாள இராணுவ அதிகாரியும், ஒரு பாகிஸ்தான் இராணுவ அதிகாரியும், ஒரு இந்திய இராணுவ அதிகாரியும், ஒரு பிஜன் இராணுவ அதிகாரியும், ஒரு இந்தோனிசியா அதிகாரியும், ஒரு ருவன்டா இராணுவ அதிகாரி மற்றும் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி உள்ளடக்கிய அதிகாரிகள் இந்த பயிற்சியை நிறைவு செய்தனர்.

இந்த பட்டமளிப்பு கற்கை நெறியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற அதிகாரிகளான சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் பி.வி.டி.எம் பெரேரா, மேஜர் சி.டீ பள்ளிவடன, இலங்கை கடற் படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் பீ.ஏ.ஆர்.ஐ ஒபேசேகர, விமானப் படையைச் சேர்ந்த ஸ்கொடர்ன் லீடர் டப்ள்யூ.ஜி.பீ.ஜி வனசிங்க, ஸ்கொர்டன் லீடர் டீ.எல்.ஏ மானகே மற்றும் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் விஜயந்திர பிரசாத் போன்ற அதிகாரிகள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டனர்.

இந்த பாதுகாப்பு கல்லூரி இராணுவ கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி எனும் பெயரில் 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் 2007 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 22 ஆம் திகதி பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி எனும் பெயரில் பெயர் மாற்றப்பட்டது. பிஎஸ்சி பாடநெறியில் கோட்பாடு மற்றும் நடைமுறைகளின் ஒரு தொகுப்பில் இராணுவ கோட்பாடு மற்றும் மூலோபாய நிலை வெளிப்பாடுகளை மேற்கொள்ள இந்த பயிற்சி நெறி சிறப்பாக விளங்குகின்றது.

மேலும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், பிரதிநிதிகள், பாதுகாப்பு சேவைக் கல்லூரியின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிக் கொண்டனர்.Nike Sneakers | Women's Nike Superrep