Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

மெதிரிகிரிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

இந் அன்பளிப்பானது ஓய்வு பெற்ற மேஜர் அருணா பெரேரா மற்றும் அவருடைய நண்பர்களால் வழங்கப்பட்ட உதவியுடன், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஒழுங்கமைப்பில் பாடசாலை உபகரணங்கள் உள்ளடக்கிய அன்பளிப்புகள் குமுதுபுர முதன்மைப் பாடசாலை மற்றும் மெதிரிகிரியவில் அமைந்துள்ள பிபியாவ முதன்மை பள்ளியிற் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கடந்த (30) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மெதிரிகிரிய ஆரம்ப பாடசாலையில் வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அதற்கமைய இத் திட்டமானது குறைந்த வருமானத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி மகன்களையும் மகள்களையுமே ஆதரிக்கும் நோக்கில் இது ஒரு முயற்சியாகும். இந்த திட்டம் சிவில் மற்றும் இராணுவத்தினரின் சமூக-சார்ந்த வேலைத்திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அன்பளிப்பானது குறைந்த வருமானத்தில் வாழும் 234 பாடசாலை மாணவ குழந்தைகளின் நலன் கருதி ரூ 300000.00/= க்கும் பெருமாதியான பாடசாலை உபகரணங்கள் மற்றம் உடைகள் உட்பட பாடசாலை நூலகத்திற்கான புத்தகங்கள் சிற்றுண்டிச்சாலைகளுக்கான பொருட்கள் போன்றன வழங்கப்பட்டன.

அதே நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து பாடசாலை மாணவ குழந்தைகள் மற்றும் 379 குழந்தைகள் மற்றும் கிராமவாசிகளுக்கு வைத்தியர் சுஜீவ ஹெட்டியாராச்சி வைத்தியர் சுபுன் கலவித்திகல மற்றும் வைத்தியர் கயான் வீரக்கோன் ஆகிய மருத்துவ உத்தியோகத்தர்கள் உட்பட 5 ஆவது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் இராணுவ அதிகாரி லெப்டிnனன்ட் உஷான் ஆரியவன்ஷ ஆகியோரால் இலவச மருத்துவமும் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இலவச மருத்துவ பரிசோதனையும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதான அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகார அதிகாரி கேர்ணல் திலக் ரணசிங்க அவர்கள் வருகை தந்ததுடன் கேர்ணல் முன் பராமரிப்பு தலைமையகத்தின் கேணல் ஜானக விமலரத்ன, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களுக்கான தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரி லெப்டினென்ட்கேர்ணல் சுதத் சமரக்கோன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மேஜர் அருணா பெரேராவின் நண்பர்கள், பாடசாலை மாணவ குழந்தைகள், ஆசிரியர்கள்; பெற்றோர்கள; மற்றும் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். Nike footwear | GOLF NIKE SHOES