Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th November 2018 20:55:41 Hours

புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த தூபி கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் திறந்துவைப்பு

வெளிக்கந்தை பௌத்த மையத்தில் புதிதாக கட்டப்பட்ட பௌத்த தூபியின் புண்ணிய பூஜை (24) ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. அதன் படி இத் தூபியின் கட்டுமானப் பணிகள் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சந்துசித்த பனான்வல அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய இப் பணிகள் கிழக்கு மாகாணத்தின் மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினரால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இம் தூபியின் பூஜை வழிப்பாட்டுக்காக பௌத மத மகா சங்கத்தினர் பௌத்த பக்தர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ படையினர் கலந்து கொண்டதுடன் இக் கட்டுமான பணிகள் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினரின் மேற்பாரவையின் கீழ் களனி பிரதேசத்தில் வசிக்கும் திரு சத்திதிஸ்ஸ அவர்களின் ஒத்துழைப்புடன் இந் தூபியின் நிர்மாண பணிகள் மேற் கொள்ளப்படட்ன.

இந்தத் தூபியின் அஸ்திவாரம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி முன்னாள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பானன்வல அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி இத்தூபியின் புனித நினைவுச் சின்னங்களுக்கும் வழிப் பாடுகள் செய்யப்பட்டது.

இப் நிகழ்வுக்கு பௌத்த மையத்தின் பிரதம அதிதியாக வெலிக்கந்த பௌத்த மத குரு உட்பட மகா சங்கத்தின் உறுப்பினர்களால் மற்றும் பௌத்த பக்தர்கள் கிழக்கு பாதுகாப் புடைத் தலைமையகத்தின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர, மற்றும் களனி திரு சத்திதிஸ்ஸ அவர்களினால் முகுர்த நேரத்தில் தங்கம் பூசப்பட்ட தூபி திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேவா வித்தாரன, நிர்வாகம் மற்றும் மேலாண்மை பிரிகேடியர் மைக்கல் வன்னியாராச்சி, கேர்ணல் நிறைவேற்று அதிகாரி கேர்ணல் ஷமிந்த விஜயரத்ன உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பௌத்த ஆலயம் 1942 இல் நிறுவப்பட்டதுடன், இந்த தூபி பல கஷ்டங்களின் மத்தியில் பராமரிக்கப்பட்டது. அத்துடன் களனி திரு சத்திதிஸ்ஸ அவர்களின் நிதி உதவியுடன் இலங்கை இராணுவத்தினரால் இத் தூபி கட்டியெழுப்பப்ட்டது. Asics footwear | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5