Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2018 11:17:02 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 6ஆவது ஆண்டு பூர்த்தி விழா

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகமானது அதன் 6ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் தலைமையில் பல நிகழ்வுகள் கடந்த வியாழக் கிழமை (15) இப் படைத் ஸ்ரீதலைமையகத்தில் இடம் பெற்றது.

இதன் போது (15) திகதியன்று மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களுக்கு இராணுவ படைக்கலச் சிறப்பணி படையினரால் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேநீர் விருந்துபசாரம் இடம் பெற்றதோடு படைத் தளபதியவர்களால் இப் படையினருக்கு டீ செட்டுகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு செவ்வாய்க் கிழமை(13) படையினர் குடுவெல வீல்பெட் பெரேரா மற்றும் பவட் சமரநாயக்க போன்ற முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 500 வயோதிபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் மாலை (13) மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அனைத்து படையினரும் பனாகொடையில் உள்ள ஸ்ரீ போதிராஜாராமையில் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றது. Sports News | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1