Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th November 2018 12:20:20 Hours

ஆரோக்கிய இராணுவம் ஆரோக்கிய தேசம் எனும் தொனிப்பொருளில் நீரிழிவு நோயாளர்களுக்கான கருத்தரங்கு

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய இராணுவம் ஆரோக்கிய தேசம் எனும் தொனிப்பொருளில் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர்களுக்காக் கடந்த புதன் கிழமை (14) இராணுவ வைத்தியசாலையில் இடம் பெற்றது.

மேலும் இக் கருத்தரங்கானது பலதரப்பட்ட வைத்திய அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டு பலவாறான சுவரொட்டிகள் காணொளிகளின் மூலம் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டு உள ரீதியான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

அந்த வகையில் ஆரோக்கிய இராணுவம் ஆரோக்கிய தேசம் எனும் தொனிப்பொருளிலான திட்டமானது பிரகேடியர் வைத்தியர் ஏ எஸ் எம் விஜேவர்தன அவர்களின் தலைமையில் நாடு முழுவதும் காணப்படும் இராணுவ வைத்தியசாலைகளில் இக் கருத்தரங்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவண அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்விற்கான விரிவுரையை வைத்தியர் லெப்டினன்ட் கேர்ணல் எம் ஏ எஸ் குரே உளவியல் வைத்திய நிபுணர் ரவிமல் கலப்பத்தி போசனை தொடர்பான வைத்தியர்களான வைத்தியர் பி எஸ் எஸ் ஹெட்டியாராச்சி மற்றும் என் எம் எஸ் ஹெட்டிகெதர போன்றோரும் வழங்கினர். best Running shoes | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf