Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2018 11:47:12 Hours

500 க்கும் மேற்பட்ட சிலவத்துர பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை

சிலவத்துர பொது மக்களின் நலன் கருதி மேலும் ஒரு மருத்துவ பரிசோதனையை மன்னார் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 500 க்கும் அதிகமான பொதுமக்களுக்கு கடந்த (06) ஆம் திகதி செவ்வாய் கிழமை மம்முத் மருத்துவ முகாமின் ஏற்பாட்டில் 54 ஆவது படைத் தலைமையகத்துடன் இணைந்து ஜெயகிரஹன, பேராதனை பல்கலைக்கழகம், கண்டி மருத்துவமனை வித்யாரத் கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தினரினால் மருத்துவ ஆலோசனை, மற்றும் மருத்துவ சிகிச்சையூம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வானது 54 ஆவது படைத் தலைமையகத்தினரின் வேண்டுக்கோளுக்கமைய 40 மருத்துவ நிபுணர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் குறைந்த வருமானத்தின் கீழ் வாழும் மக்களின் நலன் கருதி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிக்காட்டலுக்ககைமைய 54 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் டபில்யூ.ஜீ.எச்.ஏ.எஸ் பண்டார அவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டது.

இம் மருத்துவ பரிசோதனையில் கலந்து கொண்ட அனைவருக்கும் 54 ஆவது படைப் பிரிவினரால் சிற்றுண்டி உணவுகளும் வழங்கப்பட்டன.

அதே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் மா போன்ற 30 நாட்களுக்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் உட்பட உலர் உணவுப் பொதிகளும் வழங்கினர்.

இந் நன்கொடைகள் மகாவிலாச்சிச்சி விமலா தேரர், டாக்டர் ஜீவாகா மற்றும் கண்டி வித்யார்த்தா கல்லூரியில் உள்ள பழைய மாணவ குழுவினர்களால் உணவுகளும் மருந்துகளுக்கும் வழங்கப்பட்டனர்.

இந் நிகழ்விற்கு 542ஆவது படைப் பரிவின் தளபதிஇ கேணல் ஐ.எச்.எம்.ஆர்.கே. ஹேரத் மற்றும் 54 படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந் நிகழ்விற்கு 542 ஆவது படைப்பிரிவினரின் மேற்பார்வையின் கீழ் 22 ஆவது கஜபா படைப்பிரிவின் படையினர்கள் மற்றும் கட்டளை அதிகாரிகளினால் இந்த மொபைல் மருத்துவ முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. bridge media | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth