Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd November 2018 14:05:07 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு உடற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு வெலிகந்தையில் அமைந்துள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் உடற் பயிற்சி நிலையமொன்று (31) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த பூர்த்தி நிறைவை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் சாந்த ஹேவாவிதாரன அவர்கள் வரவேற்று பின்னர் படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

இந்த இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் 10 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினென்ட் கேர்ணல் ருவன் எகலபொல அவர்களினால் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதிக்கு வழங்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்விற்கு 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மனாஜ் முதன்னாயக, 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி கபிர உதலுபொல மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Nike air jordan Sneakers | Nike Shoes, Sneakers & Accessories