Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2018 19:29:17 Hours

'சஹாசக் நிமவும - 2018 கண்காட்சியில் இராணுவத்திற்கு விருது

தேசிய கண்டு பிடிப்பு கண்காட்சி - 2018 ஆண்டிற்கான விருதினை இராணுவம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் இராணுவத்தின் அங்கத்தவர்களினால் கண்டு பிடிக்கப்பட்ட புதிய பொருட்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் இந்த பொருட்களுக்கு விருதுகள் கிடைக்கப்பெற்றன.

இந்த கண்காட்சிகளில் இராணுவத்தின் 29 அங்கத்தவர்கள் பங்கேற்றிக் கொண்டதுடன் 19 தங்கம், சில்வர் மற்றும் உலோக பதக்கங்களையும் பெற்று சாதனைகளையும் படைத்துள்ளனர்.

அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களைச் சேர்ந்த படையினர்களினால் கண்டு பிடிக்கப்பட்ட பொருட்கள் இந்த கண்காட்சியில் முன் வைக்கப்பட்டன. அத்துடன் இந்த கண்காட்சிகள் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இலங்கையின் இராணுவத்தின் ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் அபிவிருத்தி பணியகத்தின் ஏற்பாட்டில் அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களிலிருந்து முன் வைக்கப்பட்ட இராணுவ அங்கத்தவர்களினால், இந்த மெகா தேசிய கண்காட்சி நிகழ்வில் 239 படைப்பு கண்டுபிடிப்புகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் 30 படைப்புகள் இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டன இதில் 19 இராணுவத்தினரது கண்டு பிடிப்புகளாகும்.

இந்த கண்காட்சிகளில் இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஜே.சி.ஐ நிஷாந்தி உயிரியல் கழிவுகளை எரிக்கும் இயந்திர கண்டு பிடிப்புகளையும், கேர்ணல் எஸ்.டீ உதயசேன டி.பி (யானை கண்காணிப்பு இயந்திரம்), 592 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த மேஜர் யூ. கே ஜயசூரிய அவர்கள் தானாக கியரில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிளும், 2ஆவது ரயிபல் படையணியின் ரயிபல்மென் டி.ஜி எட்வட் அவர்களினால் முன் வைக்கப்பட்ட (மிடி) இயந்திரமும் கண்காட்சியில் விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த விருதுகள் (26) ஆம் திகதி வௌ்ளிக் கிழமை பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.Running sports | Women's Nike Air Force 1 Shadow trainers - Latest Releases , Ietp