Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2018 13:50:59 Hours

காலாட் படைத் தலைமையகத்தின் 29 ஆவது ஆண்டு விழா

பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை காலாட் படைத் தலைமையகத்தின் 29 ஆவது ஆண்டு விழா நிகழ்வானது (23) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலாட் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன்படி இக் காலாட் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் எம்.எம். கித்சிறி அவர்களின் வேண்டுகோளின் பேரில் இக் காலாட் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.ஆர்.

குலதுங்க அவர்கள் பிரதான விருந்தினராக கலந்து கொண்டார். அவரது வருகையை ஏற்று படையினரால் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மூன்று பிரிவுகளாக 24 அதிகாரிகள் உட்பட் 485 படையினர்களுடன் ‘மாஸ்கொட் கந்துலா’ ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வண்ணமயமான இராணுவ அணிவகுபு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந் அணிவகுப்பின் பின் பிரதான விருந்தினர் அவர்களிடம் இந் நிகழ்வில் அணிவகுப்பு மரியாதைக்கு முன்னர் அணிவகுப்பு ஆணையாளர் வேண்டுகோளை மறுபரிசீலனை செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகள் மற்றும் 2018 ஆம் அண்டுகளின் (volunteer and regular) படையணிகளுக்கான அணிவகுப்புக்களுக்கம் வெற்றிகளையும், அண்மையில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கங்களைப் பெற்றவர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

அதன் பின்னர் அனைத்து முக்கிய அணிகளுக்கிடையிலான முக்கியத்துவம் குறித்து மேஜர் ஜெனரல் குலதுங்க அவர்கள் படையினர்களுக்கு சொற்பொழிவுகளை வழங்கினார். short url link | 『アディダス』に分類された記事一覧