Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2018 13:27:53 Hours

ஆனந்தியன்ஸ் ஏற்பாட்டில் வடக்கில் இருந்து தெற்கு பிரதேசத்திற்கு சுற்றுலா பயணம்

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய ஆனந்தியன்ஸ்களின் ஒத்துழைப்புடன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஒக்டோபர் மாதம் 17 - 20 ஆம் ஆம் திகதி வரை சகோதரத்துவ திட்டத்தின் இரண்டாம் கட்ட சுற்றுலா பயணமானது இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களினால் ஆலோசனைக்கமைய ஒழுங்கமைக்கப்பட்டது. இதற்கமைய இராணுவ தளபதியவர்கள் ஆனந்த கல்லூரியின் பழைய ஆனந்தியன்ஸ் ஆவர்.

இச் சுற்றுலா பயணத்தில் பருத்திதுறை அல்வாய் அம்பால் வித்தியாலயத்தில் 38 மாணவர்கள் 9 ஆசிரியர்கள் மற்றும் 6 பெற்றோர்களின் பங்களிப்புடன் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஆசிர்வாதம் மற்றும் ஒத்துழைப்புடன் ஒக்டோபர் 17 ஆம் திகதி கதிர்காமத்துக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர். அதற்கமைய இச் சுற்றுலா பயணத்திற்கு தேவையான உணவு போக்குவரத்து வசதிகள் இலங்கை இராணுவ மின்சார மற்றும் மெக்கானிக்கல் பொறியாளர்கள் படையணியினரால் வழங்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து இக் குழுவினர்கள் இராணுவத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் பழைய ஆனந்தியர்களின் ஒழுங்கமைப்பில் இரவு நேர விடுதி மற்றும் உணவும் வழங்கப்பட்டன. இதேபோல் கதிர்காமாத்திலிருந்து திரும்பும் இவர்களுக்கு காலை உணவுகள் தேநீர் விருந்தும் இலங்கை இராணுவ மின்சார மற்றும் மெக்கானிக்கல் பொறியியலாளர் படையணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டது.

அதற்கமைய கதிர்காம பிராந்தியத்தில் பணியாற்றும் படையினரின் ஒருங்கிணைப்புடன் உணவு மற்றும் சிற்றுண்டி சேவைகளை வழங்கப்பட்டன. கூடுதலாக ஒத்துழைப்புகள் பயணத்திற்கு தேவையான ஆதரவும் 4 ஆவது இலங்கை இராணுவ சிங்க படையணி மற்றும் விஜயபாகு காலாட்படை படையணி தலைமையகத்தினராலும் வழங்கப்பட்டன.

'தெற்கில் இருந்து வடக்கு சகோதரத்துவம் திட்டம்' பழைய இழைஞைர் சங்கத்தினர் முன்னதாக இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை அறிமுகப்படுத்தியது ஆனந்தியர்களின் ஒரு முன்முயற்சியாக காணப்பட்டது.

இந்த கருத்து பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டமானது தெற்கில் உள்ள வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளுக்கும் இடையே நல்லெண்ணம், புரிதல், நட்பு மற்றும் இன ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பழைய ஆனந்தியர்களால் ஒழுங்கமைக்கப்பட்டது.அத்துடன் வடக்கில் இருந்து வந்த குழுவினர்களுக்கு தெற்காசியர்களுக்கு விருந்தோம்பல;களும் வழங்கி மகிழ்ந்தனர்.Sports brands | Nike Shoes