Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2018 13:50:09 Hours

கிளிநொச்சி படையினரால் கூடைப்பந்து மற்றும் பூப்பந்தாட்ட போட்டிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 13 கூடைப்பந்தாட்ட குழு மற்றும் 26 பூப்பந்தாட்ட குழுவினர்களின் ஒத்துழைப்புடன் கடந்த (17) ஆம் திகதி புதன் கிழைமையன்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இப் போட்டிகள் நடைப் பெற்றது.

அதனைத தொடர்ந்து இப் போட்டியின் இறுதியில் 9 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 19ஆவது காலாட் படையணி தெரிவு செய்யப்பட்டதில் மிகவூம் திறமையாக விளையாடி 9ஆவது விஜயபாகு காலாட் படையின் கூடைப் பந்தாட்ட அணியினர் வெற்றி பெற்றனர்.

அதன்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக அணியினார் மற்றும் 21 ஆவது காலாட் படையணிகளுக்கிடையில் நடைப் பெற்ற பூப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக அணியினர் வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

இப் போட்டி நிகழ்வில் வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதகளை வழங்க பிரதான அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் கலந்து கொண்டதுடன் 57 ஆவது படைப் பிரிவு மற்றும் 66 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதிகள் மற்றும் பல படையினரும் கலந்து கொண்டனர். Asics shoes | adidas garwen spezial white shoes - New In Shoes for Men