Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2018 08:05:28 Hours

யாழ்ப்பாணத்தில் முன்னிலைப்படுத்தப்பட மதிப்பு புலம் கைவினை மற்றும் வரைபட முக்கியதுவத்தை விரிவுபடுத்தி வைத்த இராணுவ தளபதி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வரைபட படித்தல் மற்றும் புலம் கைவினை போட்டியானது கடந்த (20) ஆம் திகதி சனிக் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் வருகைதந்தார்.

அந்த வகையில் இப் போட்டிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கீழ் இயங்கும் 39 படையணிகளில் ஒவ்வொறு குழுவிலும் 10 உறுப்பினர்களை உள்ளடக்கி போட்டியிட்டதில் 16 அணிகள் 2 ஆவது சுற்றுக்கு தேர்வு ஆகின. அதன் படி இதில் இரண்டு அணிகள் (அதாவது 4 ஆவது விஜயபாகு காலாட்படை படையணி மற்றும் 12 ஆவது விஜயபாகு காலாட்படை படையணியும்) இறுதி போட்டியில் நுழைவதற்கு தகுதி பெற்றன. இருப்பினும் 4 ஆவது விஜயபாகு காலாட்படை படையணி சாம்பியன்ஸ் மிக அதிக புள்ளிகளைப் பெற்றதுடன் மற்றும் சிறந்த போட்டியாளர் விருது கோப்ரல் ஜீ.எச்.எல்.கே துளிப் குமார அவர்கள் பெற்றுக் கொண்டார். அதன்படி 12 ஆவது விஜயபாகு காலாட்படை படையணி ரன்னர் அப் விருதைப் பெற்றது.

இப் போட்டியில் வெற்றிப் பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் மற்றும் வெற்றிக் கிண்ணம் போன்றன இராணுவ தளபதி மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் வழங்கப்பட்டது.

விருது வழங்கும் நிகழ்வின் பின்னர் இராணுவ தளபதி அவர்களின் ; உரை நிகழ்த்தப்பட்டது இவ் உறையின் போது வரைபட வாசிப்பு பயிற்சியில் படையினர்களின் 'கொள்திறன் சார்ந்த' முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந் போட்டியானது யாழ் குடாநாட்டில் பணிப்புரியும் இராணுவ படையினர்களின் அறிவு; திறமைகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த போட்டி முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை யாழ் பாதுகாப்பு கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களால் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 523 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான பிரிகேடியர் டிக்கிரி திஸாநாயக அவர்களால் வரவேற்புரை மற்றும் இப் போட்டியின் முக்கியத்துவம் பற்றியும் உறையாற்றினார். அத்துடன் 52 ஆவது படை பிரிவின் கட்டளை தளபதியான பிரிகேடியர் மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்கள் இப் போட்டியில் முக்கிய அமைப்பாளாரக பால கருத்துக்களையும் விளக்கினார்.

இப் போட்டி நிகழ்விற்கு வடக்கு முன்னரங்க பாதுகாப்பு பகுதியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பெரமுன மற்றும் 51 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனேவிரத் 55 ஆவது படைப் பிரிவன பிரிகேடியர் ஜயந்த குனரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட விமானப் படை மற்றும் கடற்படையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.Adidas footwear | 『アディダス』に分類された記事一覧