Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2018 12:46:15 Hours

முன்னாள் போராளிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சிகள்

எல்டிடிஈ பயங்கரவாதத்திலிருந்த முன்னாள் போராளிகள் புணர்வாழ்வளித்ததன் பின்பு சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்புகுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

இந்த பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி இம்மாதம் 12 ஆம் திகதி நிறைவடைந்தது. இந்த தொழில் நுட்ப களனி பயிற்சிகளை இராணுவ சமிக்ஞை படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஏ.என்.பி.டி மனதுங்க அவர்கள் மேற்கொண்டார்.

இந்த பயிற்சியின் நிறைவு விழாவில் பயிற்சிகளை மேற்கொண்ட இந்த சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினர்களுக்கு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

அத்துடன் இந்த பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்கள் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள், விஸ்வமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் எம்.ஜி.ஏ மலல்தெனிய அவர்கள் இணைந்திருந்தனர்.Nike air jordan Sneakers | UK Trainer News & Releases