Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2018 19:15:57 Hours

மன்னார் கிராமவாசிகளின் வேளாண்மை கருதி கிணறுகள் அமைத்து நீர் வழங்கல்

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54ஆவது படைப் பிரிவினரால் மன்னார் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பத்தினருக்காக குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞானவியல் ரீதியில் நிலங்களைத் தோண்டி கிணறுகள் அமைக்கும் திட்டமானது பேராதெனிய பல்கலையின் நிலவியல் பிரிவினரின் ஒத்துழைப்போடு இடம் பெற்றது.

இத் திட்டத்தில் 54ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் டபிள்யூ ஜி எச் ஏ எஸ் பண்டார மற்றும் இப் படையின் படையினர் போன்றௌர் பேராதெனிய பல்கலை மாணவர்களுடன் இணைந்து ஒத்துழைப்பை வழங்கியதுடன்; இத் திட்டமானது மன்னார் மாவட்ட மக்களுக்கு சிறந்த பயன் தரும் திட்டமாகக் காணப்படுகின்றது.

மேலும் பேராதெனிய பல்கலையின் நிலவியல் பிரிவினர் பேராசிரியர் அதுல சோரத்தின அவர்களின் தலைமையில் இத் தோண்டுதல் மற்றும் பரிசீலிக்கும் செயற்பாடுகள் மன்னார் பிரதேசத்தில் நீரை வழங்கும் நோக்கோடு இடம் பெற்றது.

இத் திட்டமானது சனிக் கிழமை (06) சிலவத்துரை கிராமத்தின் கொண்டாச்சி விஜயகாமப் பிரதேசத்தில் அதிகாரிகளின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந் நிகழ்விற்கான ஒருக்கிணைப்பை 542ஆவது படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் கேர்ணல் ஐ எச் எம் ஆர் கே ஹேரத் அவர்கள் வழங்கியதோடு 54ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் கண்காணிப்பில் இத் திட்டம் முன்னெடு;க்கப்பட்டது. Running sports | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos