Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th October 2018 20:00:34 Hours

இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 100 ஆண்டு நிறைவு விழா

இராணுவ சேவைப் படையணியின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழா பனாகொடையில் உள்ள இராணுவ முகாமில் (12) ஆம் திகதி காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்த 100 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு படையணியினால் அஞ்சல் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் அன்றைய தினம் முத்திரைகள் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஆர்.ஆர்.பி குணதிலக அவர்கள் வரவேற்றார்.

பின்னர் அஞ்சல் அலுவலகத்தின் பணிப்பாளர் சாந்த குமார மீகமகே அவர்களினால் இந்த முத்திரைகள் இராணுவ தளபதிக்கு வழங்கி இந்த நிகழ்வின் போது வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்வில் இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஆர்.ஆர்.பி குணதிலக அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து இராணுவ தளபதியுடன் இராணுவ சேவைப் படையணியின் உயரதிகாரிகள் மற்றும் படையினர் குழுப் புகைப்படத்தில் இணைந்திருந்தனர்.

அத்துடன் இராணுவ தளபதியினால் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிடப்பட்டது.

இந்த நிகழ்வில் இராணுவ சேவைப் படையணியின் உயரதிகாரிகள் , ஓய்வு பெற்ற உயரதிகாரிகளும் இணைந்திருந்தனர்.

இலங்கை இராணுவ சேவைப் படையணி 1918 ஆம் ஆண்டு 12 ஆம் திகதி சிலோன் விநியோகம் மற்றும் போக்குவரத்து படையணி எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு இதன் தலைமையகம் கொழும்பு வொக்சோல் வீதியில் அமைக்கப்பட்டது. காலப் போக்கில் 1972 ஆம் ஆண்டு இலங்கை தரைப்படை சேவைப் படையணியாக பெயர் மாற்றப்பட்டது. இந்தப் படையணியில் தற்பொழுது 213 அதிகாரிகளும் 4889 படை வீரர்களும் கடமை வகிக்கின்றனர்.jordan release date | jordan Release Dates