Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2018 16:38:11 Hours

அனர்த்தங்களுக்கான தயார்நிலையில் ஆயிரக்கணக்கான இராணுவப் படையினர்

இயற்கை அனர்தங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 14 58 மற்றும் 53ஆவது படைத் தலைமையகங்களின் 1200 படையினர் இயற்கை அனர்தங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த திங்கட் கிழமை (08) இராணுவ தலைமையகத்தால் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் முன்னர் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள கொழும்பு களுத்தரை கம்பஹா காலி மற்றும் புத்தளம் மாவட்டங்கள் போன்று அனர்தங்கள் ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு 144 படையினர் செயற்பட்டனர்.

அந்த வகையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இணைந்து இராணுவத்தினரை 24 மணித்தியாலத்திற்குள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள களனி உடுகம பிடிகல நாகொடை வெலிபென்ன ஹொரவல புலத்சிங்கள பிலிகன்நுறுவ வலல்ல யடதொலவத்த புத்தளம் மற்றும் கெலனிமுல்ல போன்ற பிரதேசங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது இராணுவத்தினர் படகுகள் கவச வாகனங்கள் பாதுகாப்பு வாகனங்கள் போன்றன பாதிக்கப்பட்டுள்ள மக்கள் காண்படுகின்ற பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவூக் பொருட்கள் போன்ற படையினரால் வழங்கப்பட்டது.

அந்த வகையில் 58ஆவது படைத் தலைமைய 581ஆவது படைப் பிரிவின் 16ஆவது கெமுனு ஹேவா படையினர் முல்கந்தை பாலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கட்டுபடுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

அதேவேளை களனி தலவத்தை ஸ்ரீ சுந்தரமாய விகாரையில் வெள்ள அனர்தம் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ள நிலையில் 141ஆவது படைப் பிரிவின் 8ஆவது காலாட் படையினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை (07) பணிகளை மேற்கொண்டனர்.

அந்த வகையில் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களின் கண்காணிப்பில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு 14 ஆவது படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா மற்றும் 58 ஆவது படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களின் தலைமையில் இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனைக்கிணங்க இப் படைகளின் கட்டளைத் தளபதிகளால் இவ் அனர்த்த நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.bridge media | Air Jordan