Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th October 2018 12:42:07 Hours

போதிராஜாராம விகாரையில் இடமபெற்ற ‘பிரித்’ தான நிகழ்வுகள்

இலங்கை இராணுவத்தின் வருடாந்த பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு பனாகொடையில் அமைந்துள்ள ஶ்ரீ போதிராஜாராம விகாரையில் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் ‘பிரித்’ தான நிகழ்வுகள் (7) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.

இந்த ‘பிரித்’ தான நிகழ்வுகள் ஶ்ரீ கல்யாணி தம்மா மஹா சங்க தேரரான இத்தேபான ஶ்ரீ தர்மாலங்கார நாயக்க தேரர் அவர்களது தலைமையில் விகாரையில் உள்ள தர்மசாலை மண்டபத்தில் சமய சம்பிரதாய முறைப்படி மேள தாளங்களுடன் இடம்பெற்றது. (8) ஆம் திகதி காலை திங்கட் கிழமை காலை தான நிகழ்வுகள் இடம்பெற்றன.

69 ஆவது இராணுவ ஆண்டு தின நிகழ்வை முன்னிட்டு இந்த பௌத்த சமய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இராணுவ பௌத்த சங்கத்தின் அழைப்பையேற்று இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களும் வருகை தந்திருந்தார்.

மேலம் படைத் தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பதவி நிலை உத்தியோகத்தர்களை கொண்ட 1000 இராணுவ அங்கத்தவர்கள் இந்த சமய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அடுத்த நாள் (8) ஆம் திகதி காலை மஹா சங்க தேரர்கள் 100 பேருக்கு ‘ஹீல் தானம்’ வழங்கி வைக்கப்பட்டன.

69 ஆவது இராணுவ ஆண்டு பூர்த்தி விழா ஒக்டோபர் 10 ஆம் திகதி பனாகொடையில் இடம்பெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்றைய தினம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு அருகாமையிலும் இராணுவ தின நிகழ்வுகள் இடம்பெறும். ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி பனாகொடை இராணுவ முகாமில் இராணுவத்தினருக்கான விருந்தோம்பல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.Nike Sneakers Store | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf