Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2018 18:54:37 Hours

பாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளர் இராணுவத் தளபதியவர்களை சந்திப்பு

பாகிஸ்தானிய இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் அக்ரம் அல் ஹக் (ஓய்வு) அவர்கள் இலங்கைக்கான விஜயத்தை ஐந்தாம் முறையாக மேற்கொண்டதுடன் அவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை (04) சந்தித்தார்.

அந்த வகையில் வருகை தந்த பாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளரை இராணுவத் தளபதியவர்களின் செயலாளரான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்கள் வரவேற்றார்.

இவ் இருவருக்குமிடையிலான சந்திப்பின் போது இராணுவத்தின் புதிய விசேட பயிற்ச்சிகள் மற்றும் கல்வியல் சார்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்திகள் மற்றும் கடல் மார்க சட்டவிரோத கடத்தல் முறைகள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடல்களும் இடம் பெற்றது.

இச் சந்திப்பின் போது இராணுவத் தலைமைய காரியாலயத்தில் நினைவூச் சின்னமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவ் அதிகாரியவர்கள் இலங்கை தொடர்பான விடயங்களின் கலந்துரையாடலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின மற்றும் விமானப் படைத் தலைமையகத்தில் விமானப் படைத் தளபதியவர்களையும் கடந்த புதன் கிழமை (03) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் இராணுவ பதவிநிலைப் பிரதானி மற்றும் கடற் படைத் தளபதிகளுடனான கலந்துரையாடலையும் இவ் அதிகாரியவர்கள் மேற்கொள்ளவுள்ளார்.

இச் சந்திப்பின் இறுதியில் இவ் அதிகாரியவர்கள் கண்டியிலுள்ள பேராதெனிய தாவரவியல் பூங்காவிற்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.

இச் சந்திப்பின் போது கலாட் படையணியின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலான மற்றும் பாகிஸ்தானிய துாதரகத்தின் செயலாளரான கேர்ணல் சஜ்ஜட் அலி அவர்களும் கலந்து கொண்டனர். Mysneakers | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today