Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th September 2018 00:01:37 Hours

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட இராணுவ உயரதிகாரிக்கு இராணுவ மரியாதைகள்

இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவி உயர்த்தப்பட்ட மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமோட்டி அவர்களுக்கு பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் (26) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.

இந்த உயரதிகாரி 1990 ஆண்டு இடம்பெற்ற போர் நடவடிக்கைகளின் போது காயமுற்று அங்கவீனமுற்றுள்ளார். இவர் பெட்மின்டன், மேசைப் பந்து, வில் ஏய்தல், சக்கர நாற்காலி விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கினார்.

அத்துடன் பரா மெய்வல்லுனர் போட்டிகளிலும் தனது திறமைகளை வெளிக் காட்டியுள்ளார். தற்பொழுது இவர் இலங்கை பரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராவார்.

இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த உயரதிகாரியை இலேசாயுத காலாட் படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் எம்.எம் கித்சிரி அவர்கள் வரவேற்று பின்னர் இலேசாயுத காலாட் படையணியினால் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

அதன் பின்னர் இவர் இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தினுள் உள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி தனது அஞ்சலியை செலுத்தினார்.

பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டார். அத்தருணத்தில் இலேசாயுத காலாட் படையணியின் உயரதிகளான மேஜர் ஜெனரல் எல்.எம் முதலிகே, மேஜர் ஜெனரல் ஏ.எல்.எஸ்.கே பெரேரா அவர்கள் இவரை வரவேற்றனர்.

இவர் இதற்கு முன்பு 1 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் ஆர்.எப்.டி பிரிவின் கட்டளை அதிகாரியாகவும்,பொது நிர்வாக பிரதானியாகவும், பிரதி புணர்வாழ்வு பணிப்பாளராகவும், இராணுவ மனித உரிமைக் குழுவின் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Nike shoes | Nike Off-White