Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2018 20:59:03 Hours

'போதை மருந்து கடத்தல் தடுப்பு பணிக்கு இராணுவம் தயாராக உள்ளதாக இராணுவதளபதி தெரிவிப்பு

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு தின விழாவை முன்னிட்டு அநுராதபுர ஶ்ரீ மஹா போதி புனித தலத்திலே இராணுவத்தினருக்கு ஆசிர்வாதம் வேண்டி ஆசிர்வாத பூஜைகள் ஒக்டோபர் மாதம் (1) ஆம் திகதி காலை இடம்பெற்றது. இந்த பூஜை நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் பின்பு இராணுவ தளபதி அவர்களினால் ஊடகங்களுக்கு வழங்கிய செய்திகளின்போது ற்கொண்டகருத்துக்கள் கீழ்வருமாறு "அன்றைய காலத்தில் இருந்து, இராணுவம் நாட்டின் வளர்ச்சிக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கியது. அத்துடன் எமது நாட்டின் சாமாதானத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது. இன்றைய காலக்கட்டங்களில் நாட்டில் பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் பாரிய திட்டங்களாகதிருகோணமலை மாவட்டத்தில் 576 குளங்களும்,பொலன்னறுவை மாவட்டத்தில் 214 குளங்களும், வெல்லஸ்ஸ பிரதேசத்தில் 1000 குளங்களும், 576 குளங்களும் புனரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்.டி.டி.ஈ பயங்கரவாதியினருக்கு எதிராக நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்துவதனால் இனங்களுக்கு இடையில் இனவாத பிரச்சினைகள் ஏற்படும் எனவும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு பிரம்பானது என இராணுவ தளபதி வலியுறுத்தினார்.

யுத்தத்தின் போது மரணித்த எல்.டி.டி.ஈ பயங்கரவாத உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களை நினைவு படுத்தி நினைவு கூறுவதால் நாட்டினுள் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டால் நாட்டின் பாதுகாப்பின் நிமித்தம் முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

அத்துடன் நாட்டினுள் 'போதை மருந்து கடத்தல் தொடர்பான தடுப்பு பணிகளுக்கு இலங்கை பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட படையணி தயார் நிலையில் உள்ளன அத்துடன் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படையும் இந்த தடுப்பு பணிகளுக்கு தயார் நிலையில் உள்ளன இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பாரிய யுத்தத்தை முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து முடிவுக்கு கொண்டு வந்தோம் என்று மேலும் கூறினார். Best Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Air Jordan 1