Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2018 15:00:28 Hours

பாலச்சேனையில் இராணுவத்தினரால் வெள்ளரிக்காய் பயிரிடுகை தொடர்பான கருத்தரங்கு

பாலச்சேனையில் 49 வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஹேலீஸ் விவசாய திட்டத்தின் மூலம் வாகரைப் பிரதேசத்தில் 23ஆவது படைத் தலைமையகத்தின் 233 படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் சுமார் 7 மில்லியன் பெறுமதியிலான வெள்ளரிக்காய் பயிர்செய்கைத் திட்டமானது நிகரான முறையில் மேற்கொள்ளப்பட்டது.

சில மாதங்களிற்கு முன்னர் 23ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் சூலா அபேநாயக்க அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள வறிய குடும்பங்களின் சுய முன்னேற்ற தொழிற்பாட்டை கருத்திற் கொண்டு விவசாயத் திணைக்களம் மற்றும் ஹேலீஸ் விவசாய திட்டத்திற்கு விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இத் திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட ஹேலீஸ் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு சுமார் 7 மில்லியன் ருபா இலாபத்தை ஈட்டக் கூடியதாக அமைந்துள்ளது. அந்த வகையில் இப் பயிரிடுகைக்கான செயற்திட்டமானது கடந்த திங்கட் கிழமை (24) மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் ஹேலீஸ் திட்டத்தின் நிர்வாகியான திரு ஏகே பத்தேகம 23ஆவது படைத் தலைமையக தளபதியவர்கள் 233ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் கிராம சேவகர்கள் அதிகாரிகள் அத்துடன் இவ் வறிய குடும்பங்களின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். jordan release date | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf