Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2018 22:48:48 Hours

காலம் சென்ற டெனிஸ் பெரேரா தொடர்பிலா நுால் வெளியீடு

காலம் சென்ற ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்கள்கள் கொத்தளாவளைப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத் தந்தையாக காணப்பட்டதோடு முன்னாள் தளபதியாக காணப்பட்டதுடன் இவர் தொடர்பான ஜெனரல் டெனிசின் தலைமைத்தும் எனும் தலைப்பிலான நுாலனது ARFARO ( ஓய்வு பெற்ற பிலாங் ராங்க் அதிகாரிகளின் சங்கம்) ஜெனரல் ஜெரி த சில்வா அவர்களால் எழுதப்பட்டு கையளிக்கப்பட்டது.

மேலும் இவரது நினைவு தின நிகழ்வுகள் (29) மாலை பத்தரமுல்லை சுகுருபாயவில் அமைந்துள்ள இலங்கை சர்வதேச பாதுகாப்பு கற்கைநெறியில் இடம் பெற்றதுடன் இந் நிகழ்வில் கௌரவமிக்க பாதுகாப்பு அமைச்சரான ருவன் விஜயவர்தன மற்றும் கடற் படை மற்றும் விமானப் படையின் தளபதிகள் அத்துடன் கொத்தளாவளைப் பாதுகாப்பு பல்கலையின் பீடாதிபதி மற்றும் பல அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந் நுhலின் பிரதிகள் அன்னாரின் நினைவை முன்னிலைப் படுத்தி பிரதம அதிதிகள் முப்படைத் தளபதிகள் கொத்தளாவளைப் பாதுகாப்பு பல்கலையின் பீடாதிபதி மற்றும் காலம் சென்ற அதிகாரியவர்களின் குடும்பத்தாரிற்கு வழங்கப்பட்டது.

மேற்படி காலம் சென்ற அதிகாரியானவர் சிலேன் சுதந்திரத்தின் பின்னர் முதன் கெடெட் அதிகாரியாக தமது பயிற்சிகளை பிரித்தானியா சென்ட்ஹர்ஸ்ட் இராணுவ பயிற்றுவிப்பில் மேற்கொண்ட அதிகாரியாக காணப்படுகின்றார்.

மேலும் இவ் அதிகாரியாவர்கள் கெடெட் அதிகாரியாக 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதியன்று இராணுவத்தில் இணைந்ததுடன் அன்னாரின் பிறந்த தினமாகவே இன்றும் இராணுவமானது அத்தினத்தை கொண்டாடுகின்றதென அவர் தொடர்பான நுhலில் எழுத்தாளரவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ் அதிகாரியவர்கள் வாலிப அதிகாரியாக காணப்பட்ட வேளை மிகவும் பொறுப்புடன் பணிபுரிந்த மூத்த அதிகாரியாகவும் கடின உழைப்பு நிலைத்தன்மை தைரியமான முன்முயற்சி மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றின் குணhம்சங்களைக் கொண்டு காணப்பட்டார்.

மேலும் இவ் அதிகாரியவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர் அவுஸ்த்திரேலிய உயர் ஸ்தானிகராகவும் அதே வேளை பபுவா நிவ்கிணி மற்றும் பிஜி போன்ற நாடுகளிலும் சேவையாற்றியுள்ளதுடன் இலங்கையின் தனியார் தொழிற்சங்கங்களில் பணிப்பாளர் மற்றும் தலைவராகவும் இவர் காணப்பட்டார்.

அத்துடன் சிலோன் இராணுவமானது 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதியன்று அன்னாரின் 19ஆவது பிறந்த தினத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இவ் அதிகாரியவர்கள் தமது இராணுவப் பயிற்ச்சிகளை சென்ட்ஹர்ஸ்ட் இல் பயின்றுள்ளதுடன் சிலோன் இராணுவத்தில் செக்கன் லெப்டின்னாக இணைந்து கொண்டார்.இவர் தியத்தலாவை பொறியியல் படையணித் தலைமையகத்தில் சேவையாற்றியதுடன் அதனைத் தொடர்ந்து 1953ஆம் ஆண்டு பானாகொடையில் புதிதாக அமைக்கப்பட்ட சிலோன் பொறியியல் முகாமில் சேவையாற்றியதுடன் 1957ஆம் ஆண்டு இராணுவ ரோயல் பொறியியல் பாடசாலையில் மற்றும் 1961ஆம் ஆண்டு பிரித்தானிய கெம்பேர்ல்லி இராணுவ கல்லுாரியிலும் பட்டப் படிப்பை நிறைவு செய்து பட்டதாரியானார்.

அதனைத் தொடர்ந்து அன்னார் சேவைக் காலத்தில் லண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் இராணுவத்தின் சார்பில் மூன்று வருடங்கள் இராணுவ பயிற்றுவிப்பு மையத்தில் 1969 முதல் 1972வரை சேவையாற்றியுள்ளார். பின்னர் இலங்கை இராணுவ பல்கலையென பெயர் பெற்றது. இறுதியாக 1977ஆம் ஆண்டு வாலிய மற்றும் முதல் பொறியியல் படையைச் சேர்ந்த அதிகாரியாக இவர் இலங்கை இராணுவப் பதவிநிலைப் பிரதானியாக தமது 46 வயதில் 1981ஆம் ஆண்டு வரை சேவையாற்றியதுடன் அன்னார் லெப்டினன்ட் ஜெனரல் எனும் பதவியோடு ஓய்வு பெற்றார். மேலும் இவ் அதிகாரியவர்கள் 11ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 2013ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். Authentic Sneakers | nike air max 95 obsidian university blue book list