Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

11th September 2018 11:41:34 Hours

புதிதாக பதவியுயர்த்தப்பட்ட படைத் தளபதிக்கு இராணுவ மரியாதைகள்

இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு புதிதாக பதவியுயர்த்தப்பட்ட 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை 56 ஆவது படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டன.

இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் 21 ஆவது சிங்கப் படையணியினரால் வழங்கப்பட்டன. அதன் பின்னர் படைத் தளபதி தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்வில் கலந்து கொண்டார்.

படைத் தளபதி 561, 563 ஆவது படைத் தளபதி மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் குழுப்புகைப் படத்திலும் இணைந்திருந்தார்.