Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

10th September 2018 19:24:03 Hours

செயற்கை உறுப்புகள் சிவிலியன்களுக்கு இராணுவத்தின் உதவியுடன் கையளிப்பு

இலங்கை இராணுவத்தின் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மடு, ஈச்சங்குளம் மற்றும் நந்திகடால் பிரதேசங்களில் குறைந்ந வருமானத்தை பெறும் குடும்ப அங்கத்தவர்களுக்கு செயற்கை கால்கள் விநியோகிக்கப்பட்டன.

இரண்டாவது கட்டத்தின் கீழ் 613 ஆவது படைத் தலைமையக வளாகத்தினுள் இந்த செயற்கை கால்கள் (7) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன. முதல் கட்ட விநியோகங்கள் கடந்த மாதம் இடம்பெற்றன.

குண்டசாலையில் உள்ள ஊனமுற்றோர் மையத்தின் தலைவர் எஸ். எஸ் அத்தநாயக அவர்களது அனுசரனையில் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு 613 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் ஆர்.கே.என்.சி ஜயவர்தன அவர்களது தலைமையில் இடம்பெற்றது.