Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2018 19:13:34 Hours

இலங்கை இராணுவம், தற்கால பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான இராணுவத்தின் விளக்கம்

இலங்கை இராணுவமானது 30 வருட காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றியோடு நிறைவுக்கு கொண்டுது இன்றுடன் 09ஆண்டுகளாகின்றன. அந்த 09 வருட காலத்திற்குள் அனுபவமிக்க நான்கு இராணுவத் தளபதிகள் இராணுவத்திற்கான கட்டளைகளை வழங்கியதோடு இவர்கள் அனைவரும் இராணுவத்தினுள் இராணுவ நடவடிக்கைகளை உயர் தரத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறுபட்ட மட்டங்களிலான பயிற்றுவிப்பு திட்டங்கள் மற்றும் பயிற்ச்சிகளை மேற்கொண்டதுடன் அப் பயிற்ச்சித் திட்டங்கள் மற்றும் பயிற்ச்சிகள் இன்றுவரை உயர் தரத்திலேயே இடம் பெற்றவண்ணம் காணப்படுகின்றன. அத்துடன் புதிய பயிற்சிகள் மற்றும் யுத்தத்தின் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை புதிய தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி யுத்தத்தை எதிர்கொள்ளும் நோக்கில் தேவையான அனைத்து பயிற்றுவிப்பு திட்டங்கள் மற்றும் பயிற்ச்சிகளையும் சகல இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருக்கு தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இனிவருங்காலங்ககளில் அரசின் அனுசரனையோடு பாரிய அளவிலான அதிகாரிகள் மற்றும் படையினர் போன்ரோருக்கு வெளிநாட்டு பயிற்ச்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் சர்வதேச ரீதியில் யுத்தத்தை கையாளும் முறைகள் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றது.

மேலும் இராணுவ தரநிலைகளின் கீழ் குறைந்த அளவிலான படையினரை உள்ளடக்கிய படைப் பிரிவினரை பலப்படுத்தியுள்ளதுடன் அதன் மூலம் இப் பிரிவுகள் குழுக்களாக நிகரான முறையில் பிரிக்கப்பட்டு எவ்வாறான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் நோக்கில் தயார்நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். யுத்தம் தொடர்பான ஆய்வார்கள் என்று கூறிக்கொண்ட சிலர் இராணுவ முகாம்களை மூடிவிடுவதாக கருதியுள்ளனர். தற்போது பாதுகாப்பு படைத் தலைமையகம் (யாழ்பாணம்) மற்றும் அனைத்து தலைமையக தரநிலைகளின் கீழ் மறுசீரமைப்புக்குள்ளாக்கப்பட்டு மூடப்பட்டுள்ள அதனுள் யுத்தத்தின் காரணமாக முக்கியப்படுத்தப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் என்னவென சுட்டிக்காட்டுமாறு யுத்தம் தொடர்பான ஆய்வார்களுக்கு இராணுவம் விடுக்கின்ற சவாலாகும்.

எப்படியாயினும் யுத்தம்இ முடிவுக்கு வந்த பின் காணப்பட்ட இராணுவ முகாம்கள் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பின்னர் அச் சூழ்நிலைகளில் காணப்பட்ட பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்ததன் பின்னர் கள கட்டளையாளர்களின் பரிந்துரையைக் கருத்திற்கொண்டு வேறுபடுத்த செயற்பட்டமை தவறில்லை. அதற்கமைய காணப்பட்ட இராணுவத் தளபதிகளால் சில முகாம்கள் அமைந்துள்ள பிரதேசங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் காணப்படுகின்ற பாதுகாப்பு நிலைமைகளின் காரணமாக தேவையேற்படின் அவை நடைமுறைப்படுத்தப்படும்.

அன்மையில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளின் தயார் நிலை தொடர்பாக தாங்கள் திருப்தியடைவதில்லையென தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பல வருடங்களின் பின்னர் ஓய்வு பெற்று வேறாக இருப்பவர்கள் இராணுவத்தின் யுத்த பலம் தொடர்பாக யாரும் விமர்சிக்க இயலாது. அது தொடர்பான தார்மீக உரிமையும் அவர்களிடமில்லை. அத்துடன் தேவையான சூழ்நிலைகளில் முன்னர் இராணுவத்தில் சேவையாற்றிய இராணுவத் தளபதிகள் மற்றும் அனுபவமமிக்க ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனைகளைப் பெற்று கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இராணுவத்தின் பலத்தை மென்மேலும் தொடர்வதற்கு எப்போதும் இராணுவம் செயற்படுவதோடு மேலும் இவ்வாறு செயற்படுவதற்கு பின்நிற்பதில்லையென மேலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம் போன்றன தங்களது தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை விமர்சிப்பதற்கு இராணுவம் தனது கண்டனத்தை தெரிவிப்பதுடன் நாட்டின் அறிவுபூர்வமான மக்கள் இவ்வாறான சந்தர்ப்பவாதிகளின் கூற்றுக்கு செவிசாய்காமல் தமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டை மீண்டும் யுத்தத்திற்கு இட்டுச் செல்லாமல் தொழில்சார் இராணுவமாக செயல்படுவதுடன் இலங்கை இராணுவத்துடனான நம்பிக்கையை மென்மேலும் வைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கின்றோம்.buy shoes | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News