Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th September 2018 11:47:40 Hours

இராணுவத்தினரால் பாலர் பாடசாலை மற்றும் பூங்கா மீள் நிர்மானித்து பாடசாலை நிர்வாகத்திற்கு கையளிப்பு

முல்லைத்தீவு செம்மலை கிராம சேவக பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை மற்றும் அதன் பூங்கா இராணுவத்தினரால் மீள் நிர்மானிக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திற்கு (4) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கையளிக்கபடும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த பணிகளுக்கான அனுசரனைகள் துலந்தன் சேனாநாயக எனும் செல்வந்தரின் அனுசரனையில் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது எண்ணக் கருவிற்கமைய, 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 593 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் லங்கா அமரபால அவர்களது தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பாடசாலை நிகழ்விற்கு பிரதம அதிதியாக 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வருகை தந்தார். மேலும் 593 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் லங்கா அமரபால, முல்லைத்தீவு கல்வி வலய பணிப்பாளர் திருமதி யூ புவனராஜா, முல்லைத்தீவு பாலர் பாடசாலை ஆசிரியர் ஆலோசகர் குணபாலன், செம்மலை மஹா வித்தியாலயத்தின் அதிபர் எஸ் பாஸ்கரன், சீ.பி.எல் (CBL). பிரதேச சந்தைப்படுத்தல் முகாமையாளர்களான துலந்த சேனாநாயக, திருமதி தில்ருக்‌ஷி சேனாநாயக மற்றும் ரஞ்ஜித் அத்தநாயக அவர்கள் வருகை தந்தனர்.

மேலும் இந்த நிகழ்வினூடாக மஞ்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பரிசு பொதிகளும் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. Running sports | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE