Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2018 13:49:24 Hours

தொழில் நுட்ப கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ரணவிரு தகவல் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியை நிறைவு செய்த 52 பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓகஸ்ட் 29 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வு திருகோணமலையில் உள்ள கிளபன்பேக் முகாமில் இடம்பெற்றது.

இப்பயிற்சிகள் இரு குழுக்களாக இடம்பெற்றன. 10 வயதிலிருந்து 15 வயது வரையிலான பிள்ளைகள் இந்த தொழில்நுட்ப பயிற்சியில் இணைந்திருந்தனர்.

இந்த பயிற்சி நெறியானது அன்மையில் இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய குடும்பத்தினரது பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் வருகை தந்து பயிற்சியை நிறைவுசெய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.

அத்துடன் இராணுவ லொஜஸ்டிக் கல்லூரியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் டப்ள்யூ.ஜி.டீ வன்னியாரச்சி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்திருந்தனர். Running sports | Marki