Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2018 13:00:48 Hours

‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் மரநடுகை நிகழ்ச்சி திட்டம்

இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ‘தெரன’ ஊடக வலயத்தின் அனுசரனையில் கடவத்த – மாத்தறை நெடுஞ்சாலை வீதிக்கு அருகாமையில் 154 கி.மீ தூரத்திற்கு மரநடுகை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் (23) ஆம் திகதி வியாழக் கிழமை மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மரநடுகை நிகழ்வு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றன. மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது அழைப்பையேற்று இந்த மரநடுகை நிகழ்ச்சி ஆரம்ப விழாவிற்கு அதுருகிரிய பிரதான நெடுஞ்சாலை நுழைவாயிலிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து மரங்களை நட்டு ‘துருலிய வெனுவென் அபி’ நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே ,தெரன ஊடக வலய முகாமையாளர் திலித் ஜயவீர, பிரதி முகாமையாளர் தொலைக்காட்சி லக்‌ஷிரி விக்ரமகே,, நிர்வாக பணிப்பாளர் திருமதி வருணி அமுனுகம, பிரதான நிறைவேற்று அதிகாரி மாதவ மதவல, பிரதி பொது முகாமையாளர் திருமதி வசந்தி நாணாயக்கார , 58 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா, 14 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா, இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.கே.ஏ.பீ குணரத்ன அவர்கள் கலந்து கொண்டனர்.

‘துரிலிய வெனுவென் அபி’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த நெடுஞ்சாலை வீதிகளின் ஓரப் பகுதிகளில் 25,000 மரநடுகைகளை நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.jordan release date | nike air jordan lebron 11 blue eyes black people