Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd August 2018 10:06:47 Hours

இயந்திரவியல் காலாட் படையணியின் மரணித்த வீரர்களின் நினைவுத் தூபி திறந்து வைப்பு

தம்புள்ளையில் அமைந்துள்ள இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த 1380 வீரர்களை நினைவு படுத்தும் நிமித்தம் நினைவு தூபி இயந்திரவியல் காலாட் படையணியினரால் அமைக்கப்பட்டு (20) ஆம் திகதி திங்கட் கிழமை திறந்து வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இயந்திரவியல் காலாட் படையணி படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா இவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து வருகை தந்த இராணுவ தளபதி பிரதான நுலைவாயில் வைத்து வரவேற்கப்பட்டதுடன் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

மேலும் இராணுவ தளபதியவர்கள் படையினர்களுடன் குழு புகைப் படத்திலும் கலந்து கொண்டது முக்கியத்துவம் அளித்தன. அதன் பின்னர் இயந்திரவியல் காலாட் படையணி படைத் தளபதியின் வேண்டுகோளின் பேரில் வருகை தந்த பிரதான விருந்தினரான இராணுவ தளபதியவர்களால் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நினைவுத் தூபிக்கு மரியாதை செலுத்தினர்.

இந் நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணி படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் படையினர்களும் கலந்து கொண்டனர். Running sports | Yeezy Boost 350 Trainers