Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th August 2018 11:12:16 Hours

சாலியபுர கஜபா சுப்பர்குரொஸ் - 2018 நிகழ்வுகள்

இராணுவத்தினரின் 2018ஆம் ஆண்டிற்கான கஜபா சுப்பர்குரொஸ் மோட்டார் ஓட்டப் போட்டி நிகழ்வுகள் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பாரிய அளவிலான பார்வையாளர்களுடன் அனுராதபுர சாலியபுரவில் அமைந்துள்ள கஜபாப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இராணுவத்தின் கஜபாப் படைத்தலைமையகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு இலங்;கை ஒட்டோ ஸ்போர்ஸ்ட் ரைவர்ஸ் கழகத்தினரின் பங்களிப்போடு (SLADA) இந் நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கௌரவமிக்க பாதுகாப்பு அமைச்சரான ருவன் விஜேவர்தன அவர்களை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் அவருடன் இணைந்து இராணுவத் தலைமையகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கஜபா படையணித் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மத்திய கட்டளை அதிகாரியான கேர்ணல் ஹரேந்திர பீரிஸ் போன்றௌர் இவ் அதிதியை வரவேற்றனர்.

அந்த வகையில் பேண்ட் வாத்தியக் குழுவினரால் இவ் அதிதியவர்கள் வரவேற்கப்பட்டு கொடியேற்றல் நிகழ்வூம் இடம்ட பெற்றதுடன் மதிப்பிற்குறிய பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களால் தியத்தலாவையில் அமைந்துள்ள காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் காமினி குணசேகர அவர்களின் நினைவுத் துபிக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந் நிகழ்வில் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர் இராணுவத் தளபதியவர்கள் படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் பல உயர் அதிகாரிகளால் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இந் நிகழ்விற்காக சாலியபுர பிரதேசத்திற்கு பிரவேசித்த வேளை அங்கு அமைந்துள்ள போதனா வைத்தியசாலையின் நோயர்களுக்கான மின்சாரவியல் இயங்கு கட்டில்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்கியதுடன் 2009ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அங்கவீனமுற்ற மேஜர் டபிள்யூ எம் எஸ் பி விஜேசுந்தர அவர்களுக்கும் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியவர்கள் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது காலம் சென்ற சார்ஜன்ட் ரத்நாயக்க அவர்களின் தாயாருக்கு சக்கர நாற்காலியை வழங்கிவைத்ததுடன் மற்றுமோர் சக்கர நாற்காலியை ஓய்வு பெற்ற ஆணைச்சீட்டு அதிகாரி – 11 ஜி வி எ எஸ் கே பெரோ அவர்களுக்கும் வழங்கி வைத்தார்.

மேலும் இராணுவத் தளபதியவர்கள் அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள மெதகம மஹா வித்தியாலயம் புவரசகுளம் வித்தியாலம் ரத்மலே திஸ்ஸ மஹா வித்தியாலயம் பளுகொலேவ வித்தியாலயம் மற்றும் பரசங்கஸ்வெவ வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரங்களை வழங்கி வைத்தார். Best Sneakers | Air Jordan